முஸ்லிம் காதலருடன் பிக்பாஸ் ஜூலி ரகசிய திருமணம்!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 01:05 am
biggboss-julie-secret-maariage-with-hamran-mark

பிக்பாஸ்1 புகழ் ஜூலியானா தனது முஸ்லிம் காதலரான ஹம்ரான் மார்க்கை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் அதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. 

ஜல்லிக்கட்டு போராட்டதில் பங்கேற்று முழக்கம் எழுப்பி வைரலான ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அவரின் நடவடிக்கை ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது அனிதா, உத்தமி, அம்மன் தாயி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜூலி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

சமீபத்தில் அந்தமான் சுற்றுலா சென்ற அவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது காதலர் ஹம்ரானுடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு என் பெஸ்டி என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மற்றொரு டிவிட்டில் என் வலிமை மற்றும் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ராஜா இவர்தான் என குறிப்பிட்டிருந்தார்.


காதலருடன் ஜூலி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. நடிகராக முயற்சித்து, மாடலாக இருந்து வருபவர் ஹம்ரன்.  நண்பர்கள் மூலம் ஜூலிக்கு ஹம்ரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகியுள்ளர். ஆனால், ஜூலிக்கு அவர் மீது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் காதலுக்கு மதம் ஒரு தடையாக இருந்ததாகவும், இதற்காக ஜூலி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அவருடன் ரகதிய திருமணமும் நடைபெற்று விட்டது. தற்போது அந்தமானில் தனது கணவருடன்  ஜாலியாக உலா வருகிறார். அந்தப்புகைப்படங்களைத் தான் அவர் வெளியிட்டு உள்ளார் என்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அவர் சில படங்களில் நடித்து வருவதால் இந்த திருமணத்தை ரகசியமாக வைத்துள்ளார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். 

அவர் நடித்து வரும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் ரகசியம் காத்து வருகிறாராம். ஆனால் அதற்கு முன்பே, ஜூலியின் நடவடிக்கைகள் மூலம் அவர்களது திருமணம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்’’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். ஏற்கெனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்சனை, ஜூலி காதலித்ததாகக் கூறப்பட்டது. ஜூலினாலே சர்ச்சைதான் போல..!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close