10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Jul, 2018 06:10 am
trisha-s-10-year-wait-continue-with-tears

பத்து ஆண்டுகளுக்கான தவம் ஏனோ த்ரிஷாவுக்கு கைகூடவில்லை. ரஜினிக்கு ஜோடியாகிற யோகம் யாரும் எதிர்பார்க்காத ஈஸ்வரி ராவுக்கெல்லாம் அமைகிறபோது த்ரிஷாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. 

ரஜினி பட அறிவிப்புகள் வெளியாகும்போதெல்லாம் எப்படியும் இந்தப்படத்தில் அவருடன் ஜோடி போட்டுவிட வேண்டும் என விடாப்பிடியாய் முயற்சிகளை கடைசி வரை மேற்கொள்வார் த்ரிஷா. ஆனால் அமைந்தால்தானே...? த்ரிஷாவின் இந்த ஆசை கிட்டத்தட்ட இப்போது இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜியுடன் ஜோடி போட்டே ஆக வேண்டும் என களத்தில் இறங்கி வலைவீசினார். ஆனால், ஏனோ பழைய வழக்கப்படி இப்போதும் அவருக்கு தோல்வியே மிஞ்சி இருக்கிறது.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல்கள் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. (ரஜினியுடன் ஜோடிபோட்டு விட வேண்டும் என தான் இளமை நாயகியாக இருக்கும்போதே ஆசைப்பட்டவர்தான் சிம்ரனும்... ஏனோ இப்போது வாய்த்திருக்கிறது அந்த வாய்ப்பு)

அடுத்து படையப்பாவின் பார்ட் 2-வில் ரஜினி நடிக்கப்போவதாகவும் இதற்காக ரம்யா கிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இனியும் ரஜினியுடன் ஜோடிபோட முடியாது என்பதை உணர்ந்து உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கிறாராம் த்ரிஷா.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close