விஷாலின் சோகத்திற்கு சிவகார்த்திகேயன் காரணமா?

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 06:51 pm
vishal-vs-sivakarthikeyan

‘நடிகர் சங்கம்’ என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தாரோ அப்போதே  கோலிவுட்டில் விஷாலின் மார்க்கெட் வேல்யூவும் சரிய ஆரம்பித்தது. நடிகர் கம் தயாரிப்பாளர் சங்கங்களைக் கைப்பற்றினாலும் இந்த தேர்தல் வெற்றிகள் அவருடைய படங்களின் வெற்றிக்கு கொஞ்சமும் உதவவில்லை. இப்படி அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த விஷாலின் மார்க்கெட்டை கொஞ்சம் தூக்கி நிறுத்தி காப்பாற்றிய படம் ‘இரும்புத்திரை’. தமிழில் மட்டுமல்லாமல் அக்கடபூமியிலும் ஹிட்டடிச்ச படம். இந்த ஹிட் கொடுத்த தெம்பில், தன் சினிமா க்ராப்பை இன்னும் மேலேற்ற நெனைச்சு, அதே இயக்குநரை அழைத்து, ‘இரும்புத்திரை பார்ட் 2’ பண்ணுவோமா என்றாராம் விஷால்.

இயக்குநரா கமிட் பண்ணி, மூணு வருஷம் எலக்‌ஷன், பஞ்சாயத்துன்னு காக்க வெச்சி, பெரிய சம்பளமும் இல்லைன்னு புலம்பி தவிச்ச இயக்குநர் திரும்ப எலிப்பொறிக்குள்ள சிக்கிடுவாரான்னு கோடம்பாக்கம் வெச்ச கண் வாங்காம பார்த்துக்கிட்டிருந்தது. 

லேட்டஸ்ட் தகவல் என்னன்னா, இயக்குநர் மித்ரன், சிவ கார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னாராம். அங்கு க்ரின் சிக்னல் போட்டுவிட்டார்கள். நல்ல வெயிட்டான சம்பளமும் கூட.  ‘நிம்மதி ஒரு படம் பண்ணிட்டு வர்றேங்க. வேணும்னா வெயிட் பண்ணுங்கன்னு’ விஷாலிடம் சொல்லிட்டாராம். 

இன்னொரு ஹிட் கைநழுவி போனதில் விஷால் அப்செட்!
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close