நடிகை டாப்ஸிக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரு?

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 06:53 pm
actress-tapsee-getting-married

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால் டாப்ஸிக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராவில்லை. ‘தமிழ் இயக்குநர்கள் தன்னுடைய திறமைய சரியாக பயன்படுத்தவில்லை’ என பேட்டிக் கொடுத்து கலவரமாக்கி,  இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 

பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வந்தார். இடையில் ஒரு  தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார். அவ்வப்போது, டாப்ஸி, த் தனது பாய்பிரண்டுடன் டேட்டிங் செல்வதாக கிசுகிசுக்கள் வெளியானது. மீடியாவில், தனது பாய்பிரண்ட் பற்றிய கேள்விகளுக்கு டாப்ஸி பதில் சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், நடிகை டாப்ஸிக்கு அவரது பாய்பிரண்டுடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நடிகை டாப்ஸி நெருக்கமாக பழகி வந்தார்.

நட்புடன் பழகி வந்த டாப்ஸியும், மேதிஸும் சமீபகாலமாக ஒருவரையொருவர் சந்திக்காமல் தவிர்த்து வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் கோவாவுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தனர். இந்நிலையில் டாப்ஸிக்கும், மேதிஸுக்கும், குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த வருட இறுதிக்குள் திருமண தேதி அறிவிப்பு வரும் என ரசிகர்கள் ஆருடம் சொல்கின்றனர்.

திருமணம் நிச்சயமாகிவிட்டது குறித்து தன் தோழிகளிடம், ‘என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் இதுகுறித்து மீடியாவில் பேசாமல் இருப்பதற்கு பயம் காரணமில்லை. அப்படி வெளிப்படுத்தினால், எல்லோரும் என்னுடைய வேலையை  விட, இதைப் பற்றியே அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் தவிர்க்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close