விஜய்க்கு நோ சொன்ன கீர்த்திசுரேஷ்... ஆச்சர்யத்தில் கோலிவுட்!

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 06:52 pm
keerthisuresh-rejects-vijay-film

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’னு சொல்வாங்களே... அப்படி பொழைக்க தெரிஞ்ச பொண்ணா தான் கீர்த்தி சுரேஷ் இருக்காங்க. ஆனா நடுவுல, இவருக்கும் விஜய்க்கும் என்ன பிரச்னைன்னு தான் தெரியலை. கிளிக்கு ரெக்க முளைச்சிடுச்சுன்னு தான் இதை எடுத்துக்கணும்.

இப்போதைய கோடம்பாக்கத்தின் ஹீரோயின் ஏரியா முழுக்கவே கீர்த்தி சுரேஷின் ஆதிக்கத்தில் தான். தமன்னா, ஹன்சிகா காலம் எல்லாம் நம்ம அண்ணாச்சி கூட ஆடிப் பாடினப்பவே மலையேறி போயாச்சு. கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கு, தமிழ்னு எல்லா ஏரியாக்களிலும் தயாரிப்பாளர்கள் வரவேற்கிறார்கள். நாம சொல்ல வந்த விஷயம் இது கிடையாது. 

விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் ஜோடிய நடிச்சுக்கிட்டு இருக்கிறார் கீர்த்தி. இதையடுத்து, அட்லீயுடன் விஜய் இணைகிற படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின் என்ற பேச்சு  கோடம்பாக்கத்தில் அடிபட்டது. ஆனால் இப்படியொரு வாய்ப்பு வரும் என்றே நினைக்காத கீர்த்தி,தமிழ், தெலுங்குன்னு கைநிறைய படங்களை அள்ளி வைத்திருக்கிறாராம். கால்ஷீட் ஒதுக்கிக் கொடுப்பதில் குழப்பம் வரும் போல தெரிகிறது.

ஆனா இந்த கால்ஷீட் பிரச்னையெல்லாம் ஹீரோயின்கள், வாய்ப்பை நாசுக்காக நிராகரிக்க சொல்கிற காரணங்கள் என்பதை இண்டஸ்ட்ரி அறியுமே. ‘கால்ஷீட் பிரச்னையை பார்த்துக்களாம்’ என்று அட்லீ சொன்னதற்கு, ‘இந்தப்படத்தில் என்னை விட்ருங்களேன்’ என்கிறாராம். பெரிய ஹீரோ, பெரிய பேனர், பெரிய சம்பளம். அப்புறம் ஏன்? என்று குழம்பி தவிக்கிறாராம் அட்லீ. தற்போது, ராகுல் ப்ரீத்சிங்கிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close