வடிவேலுவுக்கு வாய்ல தான் சனி! 

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 06:20 pm
actor-vadivelu-s-torture-to-director-shankar

செந்தில் - கவுண்டமணிக்கு பிறகு, காமெடியில தயாரிப்பாளர்களை கரை சேர்த்தவர் வடிவேலு தான்! ஆனா, அந்த பெரிய இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக் கொள்ளாம அவ்வப்போது ‘ரொம்ப சீ...ப்பா’ அவர் கொடுத்த இம்சைகள் தான் அரசியல் எண்ட்ரியோட மாப்புக்கு ரசிக்கர்கள் ஆப்பு வெச்சிட்டாங்க. கைவசம் படங்களே இல்லாம இருந்தாலும், ‘யானை குப்புற படுத்தாலும், ஒருக்களித்து படுத்தாலும் ஆயிரம் பொன். நான் யானை’ன்னு இன்னும் ‘லகலக’ பண்ணிக்கிட்டிருக்கார்.

சரி விஷயத்துக்கு வருவோம். ஷங்கர் ரசித்து தயரித்த படம் ‘இம்சை அரசன்’. இரண்டாம் பாகம் தயாரிக்க திட்டமிட்ட அவருக்கு வடிவேலு கொடுத்த ‘இம்சைகள்’ எல்லாமே ஊரறிந்த கலாட்டா. இதுவரைக்கும் சுமார் எட்டு கோடி ரூபாய் ஷங்கருக்கு நஷ்டமாம். அதை வாங்கிக் கொடுங்கன்னு இயக்குநர் ஷங்கர், ‘தயாரிப்பாளர் சங்கத்துல’ கடிதாசி கொடுத்ததெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். அப்படியும் அடங்காத வடிவேலு, ‘எனக்கெல்லாம் ஒரு பய ரெட் கார்ட்’ போட முடியாதுன்னு இன்னும் பஞ்சாயத்தை இழுத்துக்கிட்டு இருக்காராம். 

சில தினங்களுக்கு முன் லைக்கா நிறுவனத்தின் முதலாளிக்கு ஒரு போன். எதிர்முனையில் வடிவேலு. “நீங்களும் ஷங்கரும் சேர்ந்துதானே 24ம் புலிகேசி தயாரிக்கிறீங்க? அந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணுங்க. நீங்க உங்களோட சிங்கிள் பேனர்ல படத்தை தயாரித்தால் என் முழு ஒத்துழைப்பும் உண்டு” என்றாராம். யோசித்து சொல்வதாக போனை கட் பண்ணினாராம் முதலாளி!

‘ஏன்ணே... ஏன்...’ என்று விசாரிக்கிற நலம் விரும்பிகளிடம், ‘நான் அம்மா காலத்துலேயே அடங்காம திரிஞ்சவண்டா... இதெல்லாம் ‘சும்மா காலம்’. இவனுங்க என்ன பண்ணுவாங்கன்னு பார்த்துடலாம்’ என்கிறாராம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close