இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் ஆபாச பட கோஷ்டியும்

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 11:23 am
karthik-subburaj-and-kallasiripazhagi-film

முன்பெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு ஆலமரமோ, அரச மரமோ இருக்கும். ஊர் பெருசுங்க மனசை ரிலாக்ஸ் பண்ண, சாராயத்தைத் தேடிய டாஸ்மாக் இல்லாத காலம் அது. அப்புறமா அதே ஊருக்கு ஒதுக்குபுறத்துல அந்த இடங்கள்ல ஒரு தியேட்டர் இருக்க ஆரம்பித்தது.  ‘அடல்ஸ் ஒன்லி’ன்னு ஸ்டைலா சொல்லி, மலையாள இறக்குமதி படங்களை ரசிக்க ஆரம்பிச்ச கூட்டம் அது. ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி. பிரகாஷ், நடிகர் சூர்யாவின் சொந்தக்காரரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புண்ணியத்துல, இப்பல்லாம் அந்த ரசிகர்களுக்கு தனி தியேட்டர் எல்லாம் தேவைப்படலை. அப்படி தயாரித்த ஒரு படம் ஹிட்டடிக்க, இப்போ தமிழ் பட தலைப்புலேயே ஆபாசத்தை அள்ளித் தெறிக்கிற மாதிரி வேணும்னு யோசிக்கிறதுக்கு தனி டீமையே’ வேலைக்கு வெச்சுருக்காங்களாம். அது சரி... பிரச்னை அது கிடையாது.

இதையெல்லாம் சத்தமில்லாம கவனிச்ச தயாரிப்பாளர் ஒருத்தர், ‘நாமளும் கோடம்பாக்கத்துல காசை அள்ளிடலாம்’னு ‘கள்ளச்சிரிப்பழகி’ என்றொரு  ஆபாசப்படத்தை தயாரித்திருக்கிறார். ‘ஏ ட்ரிபியூனல்’ னு சொல்லி ஒரு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டார். அப்படியென்றால் ‘ஏ’ யை விட அதிகமா விஷயம் இருக்குமாம். இவர் ரிலீசுக்கு தயாராகிற நேரத்தில்தான் திடீர் அதிர்ச்சி. ‘கள்ளச்சிரிப்பு’ என்றொரு ஷார்ட் பிலிம் தயாரித்து அதை செல்போன் ஆப் மூலம் வெளியிட்டிருக்கிறார் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் வருகிறது. அவ்வளவுதான்… பதறியடித்துக்கொண்டு கார்த்திக் சுப்புராஜிடம் பேசியவருக்கு நல்ல டோஸ் விழுந்ததாம். “யோவ்… உன் படமும் என் படமும் ஒண்ணா. அசிங்கப்படுத்தாத. போனை வை” என்றாராம் கார்த்திக் சுப்புராஜ்.
இதை தலையெழுத்தேன்னு நெனைச்சு தள்ளி வைக்க வேண்டியது தான்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close