த்ரிஷாவை போல திருமணத்தை நிறுத்திய இன்னொரு நடிகை?

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 12:25 pm
another-actress-who-stopped-marriage-like-trisha

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்த்னா. இவரும், கன்னட நடிகர் ரஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்தனர். ஷூட்டிங் சமயத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததால், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து அறிவித்தனர். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. இதற்கிடையில், ராஷ்மிகா நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ளார். இதன் பாடல் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தின் காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்திருப்பது தான் திருமணம் நின்று போனதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ராஷ்மிகாவின் தரப்பில் ‘திருமணம் நின்று போனதாக சொல்வது வெறும் வதந்தி தான். தேதி மட்டுமே தள்ளிவைக்கப்பட்டுள்ளது’ என்கின்றனர். 

இதற்கு முன்னர் நடிகை த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close