தமன்னா போட்ட கெட்ட ஆட்டம்

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 03:17 pm
tamanna-s-item-dance-in-kannada-movie

எடுத்துக்கோ... எடுத்துக்கோ என தள்ளுபடியில் அண்ணாச்சியுடன் ஆடிய போதே ரசிகர்களின் மனக்கோட்டையிலிருந்த ஹீரோயின்களின் மவுசு சீட்டுக்கட்டு போல சரிய ஆரம்பித்து விட்டது. 

‘சிவாஜி’ வரை டாப் கியரில் போன நடிகை ஸ்ரேயா வடிவேலுடன் ஒற்றைப் பாடலுக்கு ஆடிய ஆட்டம் தான் ‘ கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ன்னு யோசிச்சு, பிடிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாக வெச்சிருக்கு.

தொலைக்காட்சி விளம்பரம், கடை திறப்பு விழாக்கள்னு கல்லா கட்டிக் கொண்டிருந்த தமன்னா, கன்னட படவுலகில், அதிரடியாக ஒரு குத்துப் பாடலுக்கு கவர்ச்சி மழையில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். 

‘குயின்’ தெலுங்க்கு ரீமேக் படமும், அடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக பார்த்திபன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ள தமன்னா, யாஷ் நடிக்கும் ‘கே.ஜி.எஃப்’ என்கிற கன்னட படத்திற்காக தான் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார்.

நடிகைகள் எமி, அமலாபால், த்ரிஷா, ஆண்ட்ரியா எல்லாம் இன்ஸ்டாகிராம்ல கவர்ச்சி  போட்டோக்களை அள்ளித் தெளிக்கிறப்போ தமன்னா பிக் ஸ்கிரீன்ல வர்றாரு...ரைட்...!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close