வாய்ப்பில்லாததால் தெலுங்கில் பிசியாகும் நடிகை நந்திதா

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 05:05 pm
actress-nanditha-busy-in-telugu-movies

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’ என்ற படம் வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 

தில் ராஜுவின் தயாரிப்பில் ‘சீனிவாசா கல்யாணம் ’ படம் ஆகஸ்ட் 9 தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் பத்மாவதி என்கிற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறார் நந்திதா. 

‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த நந்திதா, தற்சமயம்‘டார்லிங்2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close