சாரி லேடீஸ்... விஜய் தேவரக்கொண்டாவுக்கு மேல்நாட்டு காதலி!

  கனிமொழி   | Last Modified : 20 Sep, 2018 04:03 am
vijay-devarakonda-s-pictures-with-foreign-girlfriend-goes-viral

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவை மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களையும் கிறங்கடித்த விஜய் தேவரக்கொண்டாவின் காதலி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விர்ஜினி என தெரிய வந்துள்ளது. 

யாருமே எதிர்பார்க்காத அளவு மாபெரும் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு, விஜய் தேவரக்கொண்டாவின் மீது தென்னிந்திய சினிமாவின் பார்வை திரும்பியது. அதன்பின் அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் சூப்பர் ஹிட்டானது. அவரின் அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் கூட ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேவரக்கொண்டாவுடன், வெள்ளைக்கார பெண் ஒருவர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஆரம்பத்தில் இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்கள் என சமூங்க வலைதளங்களில் பேசப்பட்டாலும், பின்னர் அதில் இருப்பது விஜய் தான் என உறுதி செய்யப்பட்டது. படத்தில் அவருடன் இருந்தது பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விர்ஜினி ஆவார். தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்,  விஜயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை அவர் பகிர்ந்து வந்தார். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் மட்டுமல்லாது, விஜய்யின் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட படங்கள் கூட இருந்தன. விர்ஜினி, 2016ம் ஆண்டு விஜய் நடித்த 'பெல்லி சூப்புலு' என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தோன்றியிருந்தாராம். அதிலிருந்து அவருக்கும் விஜய்க்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதல் ஜோடிகள் உலா வருகின்றனராம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close