சிம்புவின் புதிய காதலி!

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 04:19 pm
actor-simbu-s-latest-lover

பழைய சர்ச்சைகள் எல்லாம் இப்போது கிடையாது. பின்மதிய வெயில் வரையில் சூட்டிங்கிற்கு மட்டம் போடுகிற சிம்பு, மணிரத்னம் படத்திற்கு அதிகாலை சூரியனையெல்லாம் பல வருடங்களுக்குப் பிறகு தரிசித்திருக்கிறார். ‘கெட்டவன்’ மோடிலிருந்து சைலண்ட் மோடுக்கு மாறி சமர்த்து பிள்ளையாக வலம் வருகிற சிம்பு தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். 

ஆனால், நடிகர் சிம்புவின் பெர்சனல் வாழ்க்கையில், காதல் பக்கங்கள் எப்போதும் பகீர் ரகம் தான். படங்களில் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் பரபரப்பாக இணைத்து காதலர்கள் எனப் பேசப்படுகிற ராசி சிம்புவுக்கு. அவருடைய பேய்த்தனமான காதலுக்கு பயந்து ஓடிய நடிகைகள் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

‘சில ஹீரோயின்களுடனான கெமிஸ்ட்ரி அப்படி’ என்று நடிகர் சிம்புவே சினிமா நிருபர்களிடம் கொளுத்திப்போட்ட சமாச்சாரங்களும் இருக்கிறது.

நயன்தாராவுடனான காதலுக்கு ‘வல்லவன்’ படத்தின் ‘உதட்டு கவ்வல்’ போஸ்டரில் பச்சைக்கொடி காட்டியதில் ஆரம்பித்தது சிம்புவின் காதல் கன்றாவி சர்ச்சைகள். காதலை தெய்வீகமாக கொண்டாடுகிற டி.ராஜேந்தரின் பிள்ளையா இப்படி?’ என்று பரிதாபப்பார்வையோடு போஸ்டரைப் பார்த்தார்கள் கோடம்பாக்கத்தில். இன்று வரையிலும் சிம்பு, பிரபுதேவா என காதலர்களை மாற்றி விக்னேஷ்சிவனில் நின்றாலும் நயனின் வாழ்க்கையில் சிம்புவின் காதல் எபிசோட் கறுப்பு பக்கங்களாகவே பார்க்கப்படுகிறது. 

அடுத்த சின்ன குஷ்பு என்று சந்தோஷமாக வலம் வந்த ஹன்சிகாவின் வாழ்க்கையிலும் சிம்புவின் காதல் ஆசை விபரீத விளையாட்டுக் காட்ட, கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்காமலேயே மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார் ஹன்சிகா. காலம் அதன் பிறகு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,கீர்த்தி சுரேஷை எல்லாம் ஆசிர்வதித்தது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

தற்போது மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் காதலியாக நடித்திருக்கிறார் நடிகை டயானா எரப்பா.

சிம்புவின் காதல் லீலைகள் ‘டயானா’விடமும் தொடருமா? என்பதே கோடம்பாக்கத்து நடிகைகளின் ஆவலாக இருக்கிறது. சமர்த்து பிள்ளை சிம்பு காதல் மன்னனாக வலம் வருகிறாரா இல்லை நிஜமாகவே சமர்த்துப் பிள்ளையாக மாறிட்டாரா என்பது பட ரிலீஸ் நேரத்தில் அவர் எடுக்கிற முடிவைப் பொறுத்தது.

மீண்டும் ஒரு காதல் எபிசோடுக்காக காத்திருக்கிறது தமிழ் சினிமா ரசிகர்களின் மனசு.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close