சர்கார் ரூ.200 கோடி... சுனாமி பதற்றத்தில் விஜய்... பகீர் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Oct, 2018 06:30 pm
sarkar-rs-200-crore-vijay-in-t-sunami-tenson

கதை திருட்டு விவகாரங்களையும் தாண்டி சர்கார் வியாபாரமும், ரிலீஸ் தகவல்களும் புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றன. 

சர்கார் பட வியாபாரம் ரூ.200 கோடி உச்சத்தைத் தொட்டு விட்டது. இந்த வியாபாரம் உச்சத்தை தொட்டதற்கு விஜயின் மார்க்கெட் வேல்யூ மட்டுமே காரணமல்ல. சன் பிக்சர்ஸின் சாதுர்யமும் இருக்கிறது. இது ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும், பயங்கர பதற்றத்தில் இருக்கிறார் விஜய். ரஜினியே தன் பட வியாபாரம் இந்த தொகைக்கு மேல் போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதாக கூறுவார்கள்.

ஆனால், வியாபார முறைகள் மாறிய பின் பலரது கைகளுக்கு தவழ ஆரம்பித்து இறுதியாக கையை மீறிய தொகைக்கு வியாபாரமாகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் படம் ஓடாவிட்டால், விற்றவர்களை விட்டுவிட்டு ரஜினியிடம் வந்து நின்று பழகிவிட்டார்கள் விநியோகஸ்தர்கள்.

 

அப்படியொரு சங்கடம் தனக்கும் நேரக்கூடும் என்று பதற ஆரம்பித்திருக்கிறாராம் விஜய். விஜயின் சந்தேகத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. கதை திருட்டு விவகாரத்தில் படம் சிக்கியதால் மக்களிடியே எதிர்மறையான எண்ணம் தோன்ற ஆரம்பித்து இருக்கிறது. கதையும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்தாகி விட்டது. இந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்திருக்குமோ என்கிற அச்சமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓரிரு கோடி என்றால் பரவாயில்லை.

நூற்றுக்கணக்கான கோடி விவகாரம் என்பதால் பதற்றத்தில் இருக்கிறார் விஜய். இதற்கு முன்பு கூட சில படங்களின் நஷ்டத்துக்கு விஜய் தண்டம் அழுதிருக்கிறார். தலைவா படத்தின் நஷ்டத்தை ஈடு கட்ட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிசும் நெருக்க 5 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்தார் விஜய். இதே நிலை புலி உள்ளிட்ட சில படங்களுக்கும் நடந்திருக்கிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close