13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை; சாதனை படைக்குமா இந்த படம்?

  SRK   | Last Modified : 23 Jan, 2018 10:54 pm


சர்வதேச அளவில் திரையுலகின் மிகப்பிரபலமான விருதுகளான ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில், விருதுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறையினரின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

இதில், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 'ஷேப் ஆப் வாட்டர்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், இயக்குனர், திரைக்கதை, நடிகை, துணை நடிகை போன்ற முக்கிய விருதுகளும் இதில் அடங்கும். அதிகபட்சமாக இதுவரை 3 திரைப்படங்கள் 14 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாதனை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

'பென் ஹர்', 'டைட்டானிக்', 'ரிட்டர்ன் ஆப் தி கிங்' ஆகிய மூன்று படங்களும் இதுவரை 11 ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளன. அந்த சாதனையை ஷேப் ஆப் வாட்டர் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close