ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த ஒன் டைரக்ஷன் பாடகர்!

  SRK   | Last Modified : 09 Feb, 2018 09:52 am


ஒன் டைரக்ஷன் என்ற இசைக்குழு கடந்த சில வருடங்களுக்கு முன் புகழின் உச்சத்திற்கு சென்றது. 17, 18 வயது சிறுவர்கள் உருவாக்கிய இந்த குழு, பல லட்சம் ஆல்பங்களை விற்று சாதனை படைத்தது. இந்த குழுவில் இருந்து ஸெயின் மாலிக் என்ற பாடகர் 2015ம் ஆண்டு பிரிந்தார். அவர் தற்போது தனியாக பாடல்கள் உருவாக்கி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

தற்போது பாலிவுட் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக ஸெயின் தெரிவித்துள்ளார். "முதல்முறையாக ஒரு பாடலை முழுவதுமாக இந்தியில் பாடியுள்ளேன்" என ஸெயின் ஒரு பேட்டியில் கூறினார். தற்போது அவர் உருவாக்கி வரும் ஆல்பத்தில் உருது மொழியில் பாடல்கள் உள்ளதாகவும், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் ஸெயின் மாலிக் தெரிவித்துள்ளார். பாங்க்ரா இசை கூட தனது ஆல்பத்தில் இருக்கும் என ஸெயின் கூறினார்.

இந்திய பாகிஸ்தான் ரசிகர்களை அதிகம் கவர ஸெயின் தனது வருங்கால ஆல்பங்களில் முயற்சிப்பார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close