'பிளேக் பேன்த்தர்' - ஹாலிவுட்டின் மிகப்பெரிய கறுப்பின சூப்பர்ஹீரோ

  SRK   | Last Modified : 16 Feb, 2018 10:05 am


2008ம் ஆண்டு முதல், மார்வெல் காமிக்ஸ் நிறுவனம், தனது பரந்து விரிந்த சூப்பர்ஹீரோ உலகின் நட்சத்திரங்களை வைத்து தனித்தனியாகவும், மொத்தமாகவும் மெகா ஹிட் படங்களை உலகிற்கு கொடுத்து வருகிறது. 

அயர்ன் மேன், தார், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் உட்பட பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளன மார்வெல்லின் படங்கள். தற்போது அடுத்த கட்டமாக,  முதல்முறையாக கறுப்பின சூப்பர்ஹீரோ படத்தை மார்வெல் உருவாக்கியுள்ளது. 2016ம் ஆண்டு வெளியான 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' திரைப்படத்தில் 'பிளேக் பேன்த்தர்' என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்த ராஜவம்ச வாரிசு, நவீன யுக்திகளை கையாண்டு எதிரிகளை வீழ்த்துகிறார். தற்போது 'பிளேக் பேன்த்தர்' கதாபாத்திரத்தை மையமாக கொண்ட படம் வெளியாகியுள்ளது.

பிளேக் பேன்த்தராக சேட்விக் போஸ்மேன் உட்பட, மைக்கேல் ஜார்டன், லுபிட்டா நியாங்கோ, பாரஸ்ட் விட்டேகர் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் சுமார் 1250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியாவில் இன்று வெளியாகிறது. 

இதற்கு முன் ஹாலிவுட்டில், கறுப்பின கதாபாத்திரங்களை மையமாக கொண்ட ஒரு சில சூப்பர்ஹீரோ படங்கள் வந்திருந்தாலும், 'ஹேன்காக்' படத்தை தவிர மற்ற எதுவும் சொல்லும் அளவுக்கு பிரபலமாகவில்லை. ஆனால், பிளேக் பேன்த்தர் படத்திற்கு பிறகு, இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close