ஈரானிய இயக்குநரின் 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' ரிலீஸ் தேதி!

  பால பாரதி   | Last Modified : 18 Feb, 2018 02:24 pm


சென்டிமென்ட்ஸ்களை பேசும் ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின்,  'பியாண்ட்  தி க்லௌட்ஸ்' என்ற திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது! 

பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, 'பியாண்ட்  தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் அல்லாத ஒரு படத்தை  மஜித் மஜீதி இயக்கிய முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்துக்கு, ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளனர்.  கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கவுதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜாய் குட்டி ஆகியோர் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டியது. 

இநிலையில், இப்படம் உலகம் முழுவதும் வரும்  ஏப்ரல் 20 ம் தேதி வெளியாவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close