முதலிடத்தில் ஸ்பீல்பெர்க்கின் படம்

  கனிமொழி   | Last Modified : 03 Apr, 2018 06:28 am


ஹாலிவுட்டில் கடந்த வாரம் வெளியான படம் 'ரெடி பிளேயர் ஒன்'. தன் படைப்புகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் 'ஆஸ்கர்' இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதனை இயக்கி தயாரித்திருந்தார்.  

"எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முயற்சிசெய்கிறோம். பிறகு, அதோடு வாழப் பழகிக்கொள்கிறோம்" என்ற முதல் வரியோடு தொடங்கி, முடியும் வரை நமக்கு ஒரு வித்தியாச அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கிறது. விர்ச்சுவல் உலகம், அங்கே உலவும் கதாப்பாத்திரங்கள், அவர்களுக்கான வெற்றி தோல்விகள் என சுவாரஸ்யமான கதையை படமாக்கி, மீண்டும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். 2045-ல் மனிதன் எப்படி இருப்பான், அவனின் வாழ்க்கைத்தரம் எப்படிப்பட்டதாக மாறியிருக்கும் என தனது கற்பனையில் மறுபடியும் மக்களை ரசிக்க வைத்திருக்கிறார். 


படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகெங்கும் 128 மில்லியன் டாலர் வசூல் செய்து, ஹாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்துள்ளது இந்த ரெடி பிளேயர் ஒன். இதில் அமெரிக்காவில் மட்டும் 41.2 மில்லியன் டாலரை ஈட்டியிருக்கிறது. வரும் நாட்களின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஹேட்ஸ் ஆஃப் ஸ்பீல்பெர்க்..!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close