2019-ல் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது விழா தேதி அறிவிப்பு

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2018 11:14 am


வருடா வருடம் அகாடமி எனப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்கா ஃபிலிம் இன்டஸ்ட்ரியில் நடக்கும். உலகமே இந்த விருதுக்காக ஏங்கிக் கிடக்கும். கடந்த 2008-ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லியனரி'  என்ற படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கும், சிறந்த பாடலுக்கும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தியா திரைத்துரைக்காக ஐந்தும், அறிவியல் தொழில்நுட்பத்திற்கு மூன்றும் என மொத்தம் எட்டு ஆஸ்கர் விருதுகளை இது வரை வாங்கியிருக்கிறது.  

தற்போது இந்தாண்டிற்காக தேதிகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. நாமினேஷன்களை ஜனவரி - 22, 2019-ல் அறிவித்துவிட்டு, ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி - 24, 2019-ல் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நடக்க இருக்கும் இந்த 91-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு இப்போது இருந்தே எதிர்ப்பார்ப்புகள் எகிறிக் கிடக்கிறது. 

வெயிட்டிங்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close