ஒரு வில்லனோடு 22 ஹீரோக்கள் மோதும் ஹாலிவுட் படம்!

  பால பாரதி   | Last Modified : 27 Mar, 2018 10:57 am


22 சூப்பர் ஹீரோக்கள், ஒரு வில்லனோடு மோதும் 'அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' என்கிற ஹாலிவுட் படம் தமிழ்,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வரும் ஏப்ரல் 27 வெளியாகிறது.  

மார்வல் காமிக்ஸ், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் மக்களின் மனதில் தனி இடம் உண்டு. அதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. இதுவரை வெளிவந்த ஒவ்வொரு அவேஞ்சர்ஸ் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. 

இதற்கு முன், 'அவேஞ்சர்ஸ்' (2012 , இரண்டாம் பாகம் 'அவேஞ்சர்ஸ் அல்ட்ரான்' ( 2015) ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது இதன் மூன்றாம் பாகம் 'அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த ஹாலிவுட் படத்தில் 22 சூப்பர் ஹீரோக்கள், ஒரு வில்லனோடு மோதும் வகையில் இந்தப் படத்தின் கதை உள்ளது.


'அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தில் ராபர்ட் டவுனி, ஜூனியர் டோனி ஸ்டார்க், க்ரிஸ் ஹேம்ஸ்வார்த், மார்க் ரூபலோ ப்ருஸ் பண்ணேர்,க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ்,ஸ்கார்லெட் ஜோகன்சன் நடாஷா, தாம் ஹாலேன்ட் பீட்டர் பார்கர், சாட்விக் போஸ்மன் டி.செல்லா,பவுல் பேட்டனி,எலிசபத் ஒல்சென் வண்டா, செபஸ்டின் ஸ்டான் பக்கி பர்ன்ஸ்,டாம் ஹிட்டில்சன் என மிகப்பெரிய ஹாலிவுட் நட்சத்திர பட்டாளமே உள்ளது.

இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார்.

ரூசோ சகோதர்களான அந்தோணி ரூசோ - ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச்.

'அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் என நான்கு மொழிகளில்  வெளியாகிறது.   

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.