90-வது ஆஸ்கர் விருது விழா: 3 விருதுகளை பெற்ற டன்க்ரிக்!

  PADMA PRIYA   | Last Modified : 05 Mar, 2018 11:57 am

ஹாலிவுட் திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அவற்றில் சிறந்தவற்றிற்கான பரிந்துரை பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டது.

சிறந்த துணை நடிகர் விருது: சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற படத்திற்காக வழங்கப்பட்டது. இந்தப் படம் உலக அளவில் நடந்துவரும் குரூரங்களில் முதன்மையானது பாலியல் கொடுமைகள். அதிலும் கொடுமையானது நாம் அதை அணுகும் விதம், அந்தப் பெண்ணைக் கேள்விகளால் துளைப்பது, அந்த வழக்கில் போலீஸ் காட்டும் மெத்தனம். த்ரீ பில்போர்ட்ஸ் அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தைத்தான் அணுகுகிறது. மில்ட்ரெட் என்பவரின் மகள் ஏஞ்சலா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். ஆனால், அந்த வழக்கை மிகவும் மெத்தனமாக போலீஸ் கையாள்கிறது. அதை எதிர்த்து மூன்று விளம்பர தட்டிகளை வைக்கிறார் மில்ட்ரெட். "Raped While Dying", "And Still No Arrests?", and "How Come, Chief Willoughby?" . காவல் துறையில் பணியாற்றும் நபர்களாக சாம் ராக்வெல்லும், வுட்டி ஹேரெல்சனும் நடித்திருந்தார்கள்.

சிறந்த சிகை அலங்கார விருது

இந்த விருது 3 பேருக்கு வழங்கப்பட்டது - கஸூ ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லுசி சிப்பிக். டார்க்கஸ்ட் ஹவர் (DARKEST HOUR) என்ற படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது:

சிறந்த துணை நடிகைக்கான விருது அல்லிஸன் ஜானேக்கு வழங்கப்பட்டது. ஐ, டான்யா (I, Tonya) என்ற படத்துக்காக அவர் இந்த விருதை பெற்றார். படத்தில் ஜானே, லாவோனா என்ற மோசமான தாயாக வருவார். டோனி ஹார்டிங் என்ற தனது மகளை துன்புறுத்தும் அவர், தனது மகளின் சுய கவுரவத்துக்கு மதிப்பளிக்காத தாயாக இருப்பார்.

சிறந்த ஆடை வடிவமைப்பு:

இந்த விருதை பிரிட்ஜஸ் என்பவர் பாண்ட் த்ரட் (PHANTOM THREAD) என்ற படத்துக்காக பெற்றார்.

சிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது:

சிறந்த முழு நீள ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் ஹெவன் இஸ் அ ட்ராஃபிச் ஜாம் ஓன் தி 405 (HEAVEN IS A TRAFFIC JAM ON THE 405) என்ற படம் வென்றது.

3 விருதுகளைக் குவித்த டன்க்ரிக்:

இந்த ஆண்டு கிரிஸ்டோஃபர் நோலனின் டன்க்ரிக் (DUNKIRK) திரைப்படம் சிறந்த எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் என 3 விருதுகளை குவித்துள்ளது. Gary A. Rizzo, from left, Gregg Landaker, and Mark Weingarten கேரி ரிஸ்ஸோ, கிரெக் லேண்டேகர் , மார்க் வெய்ங்கர்ட்டன் மூவரும் சிறந்த இசைக்கலவைக்கான Sound Mixing விருதைப் பெறுகிறார்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close