வசூல் வெள்ளத்தில் அவெஞ்சர்ஸ் இனஃபினிட்டி வார்!

  கனிமொழி   | Last Modified : 29 Apr, 2018 05:01 pm


அவெஞ்சர்ஸ் இனஃபினிட்டி வார் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த படத்தை பற்றிய பேச்சு தான். உலகம் முழுவதும் இருக்கும் அவெஞ்சர்ஸ் ஃபேன்ஸ் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கொடுத்துள்ளார்கள். குறிப்பாக வில்லன் தேனோஸ்ஸின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

இந்நிலையில் இப்படம் எல்லோரும் எதிர்பார்த்தது போல் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்து வருகின்றது. அதிலும் இந்தியாவிலேயே இரண்டு நாட்கள் முடிவில் ரூ 63 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டது, வேறு எந்த ஹாலிவுட் படமும் இத்தகைய வரவேற்பை பெறவில்லை.

இதில் தமிழகத்தில் இப்படம் ரூ 6.5 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது, மேலும், உலகம் முழுவதும், இனஃபினிட்டி வார் ரூ 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வசூல்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close