ரசிகர் உயிரைக் காவு வாங்கிய ’அவெஞ்சர்ஸ்' படம்!

  பால பாரதி   | Last Modified : 03 May, 2018 05:19 pm


ஹாலிவுட் திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’, ஒரு ரசிகரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ ஹாலிவுட் திரைப்படத்தில் ராபர்ட்டானி, கிறிஸ்கெம்ஸ் வொர்த், பார்க்ரூபலா, கிறிஸ்வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இரட்டையர்கள் ஆன்டனி ரஸோ - ஜோரஸோ இந்த படத்தை இயக்கி உள்ளனர்.

ஒரு வில்லனுடன், 22 சூப்பர் ஹீரோக்கள் மோதும் இந்த திரைப்படம், 3டி நவீன தொழில்நுட்பத்தில், கிராபிக்ஸ் உத்திகளுடன் திகில் பின்னணியுடன் உருவாக்கப்பட்டு, சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும்‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அதேநேரத்தில் உலக அளவில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 


இந்நிலையில், ஆந்திராவில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ படத்தைப் பார்ப்பதற்க்கு பாட்சா என்ற ரசிகர் நண்பர்களுடன் சென்றார். திகில், மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து  பரவசமாகிக் கொண்டிருந்தார். திரையில் அதிரடி சண்டை காட்சி ஓடிக் கொண்டிருந்த போது பாட்சாவுக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதயறிந்த நண்பர்கள், உடனே பாட்சாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலனின்றி பாட்சா பரிதாபமாக உயிர் இழந்தார். 

’அவெஞ்சர்ஸ்' திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close