'கேம் ஆப் த்ரோன்ஸ்' ஜோடிக்கு டும் டும்...

Last Modified : 27 May, 2018 09:50 pm


'கேம் ஆப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சித் தொடரில், கதாநாயகன் கதாநாயகியாக நடித்த கிட் ஹேரிங்டன் மற்றும் ரோஸ் லெஸ்லியின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் கேம் ஆப் த்ரோன்ஸுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர், உலகின் மிக லாபகரமான தொடரும் ஆகும்.

இதில் கதாநாயகனாக ஜான் ஸ்னோ என்ற கேரக்டரில் நடித்து வரும் கிட் ஹாரிங்டனின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்வது வேறு யாரையுமில்லை. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக சில வருடங்களுக்கு முன் நடித்த ரோஸ் லெஸ்லியைத் தான். திரையில் நெருக்கமாக நடித்த ஜோடிகள் நிஜ வாழ்விலும் ஒன்று சேருகிறார்கள். கடநத வருடம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் மாதம் 23ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஸ்காட்லாந்தில், மணமகள் லெஸ்லியின் தந்தைக்கு சொந்தமான ஒரு மாளிகையில் திருமணம் நடைபெறுகிறதாம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close