ஜானி டெப்-க்கு என்ன ஆச்சி? பதறும் ரசிகர்கள்

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2018 02:58 pm
fans-super-worried-after-seeing-johnny-depp-s-condition

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்-ன் சமீபத்திய புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

பைரட்ஸ் ஆப் தி கரீபியன் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் ஜானி டெப். ஹாலிவுட்டின் உச்சநட்சத்திரமான இவருக்கு நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இவர் நடித்த ஜாக்ஸ் ஸ்பாரோ கதாபாத்திரம் குழந்தைளால் மிகவும் விரும்பப்பட்டது. 
தற்போது இவர் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரஷ்யாவில் தனது ரசிகர்களுடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. 

அதில் அவர் மிகவும் மெலிந்து காட்சியளிக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 முறை ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவர் தற்போது மிகவும் சோர்வடைந்து ஆளே அடையாளம் தெரியாதது போல காட்சியளிப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது அவருக்கு 54 வயதாகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close