பாலியல் பலாத்கார விசாரணை வலையில் சில்வஸ்டர் ஸ்டாலன்

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 10:38 am
actor-sylvester-stallone-under-probe-for-sexual-assault

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன் மீதான பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையிடம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை வழக்காக பதிவு செய்வது தொடர்பாக பாலியல் குற்றத் தடுப்புப் போலீஸ் ஆய்வு செய்து வருகிறது.

71 வயது நிரம்பிய சில்வர்ஸ்டர் ஸ்டாலன் 'ராக்கி', 'ராம்போ' உள்ளிட்ட படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்றவர். இவர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக அந்தப் பெண் குற்றம்சாட்டியிருந்தார். 

இதன் தொடர்ச்சியாக, ஹாலிவுட் வட்டாரத்தில் நடக்கும் பாலியல் தாக்குதல்களை தடுக்கும் முயற்சியாக #MeToo (மீ டூ) என்ற ஹேஷ்டேக் மூலம் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஹார்வி வெய்ன்ஸ்டீன், கெவின் ஸ்பேசி, சார்லி ரோஸ் போன்ற பல நடிகர்களும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளால் சர்ச்சையில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் 1987-ல் இஸ்ரேல் நாட்டில் நடந்த ஷூட்டிங்கின்போது தன்னுடன் உறவில் இருந்ததாக சில்வர்ஸ்டர் ஸ்டாலன் தரப்பினர் ஒப்புக்கொண்டாலும், அது இரு தரப்பு சம்மதத்துடன் நடந்து என்பதால் விளம்பரத்துக்காக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர்.

சில்வர்ஸ்டர் ஸ்டாலன் மீதான புகார் விளம்பரத்திற்காகக் கொடுக்கப்பட்டதா அல்லது உண்மையான குற்றச்சாட்டா? என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close