'தி நன்' ட்ரெய்லர்: கிட்டியதா திகில் அனுபவம்?

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 12:22 pm
the-nun-movie-teaser-trailer-review

ஆவி, பூதம், அமானுஷ்யம், திகில், குற்றம், நடந்தது என்ன?

இப்படி அவ்வப்போது டிவியில் வரும் திகில் தொனிகள் உங்களுக்கு போதிய மிரட்டலைத் தரவில்லை என்றால், இப்போதைக்கு நீங்கள் பார்க்க வேண்டியது தி நன்' (The Nun) பட ட்ரெய்லரைத்தான்.

வார்னர் பிரதர்ஸின் திகில் பட வரிசையில் அடுத்து வெளிவர இருப்பது 'தி நன்'. 'கான்ஜுரிங் 2' படத்தில் வரும் வாலக் என்ற கதாபாத்திரத்தை மேலும் விவரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள படம் 'தி நன்'. கடைசி வரை தவறாமல் பார்க்கவும் என்ற டைட்டில் கார்டோடு தொடங்குகிறது ட்ரெய்லர். ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று பார்த்து முடித்த பின்னர்தான் புரிகிறது. 

சவுண்ட் எஃபக்ட்ஸும், காட்சிகளில் இருக்கும் மிரட்டலும் நம் கண்களை மூடச் செய்கிறது... அல்லது கைகள் பாஸ் பட்டனைத் தேடி அலைகிறது.

கோரின் ஹார்டி இயக்கி, ஜேம்ஸ் வான் மற்றும் பீட்டர் சாஃப்ரன் தயாரிக்கும் இந்தப் படம் கான்ஜுரிங் படத்தின் கடைசிப் பகுதியாக வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் டெமியன் பிசிர், தைஸ்ஸா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகட் முதலானோர் நடித்துள்ளனர்.

ரோம் நகரத்தில் இருக்கும் ஒரு புராண தேவாலயத்தில் தீய சக்தி ஒன்று உலவி வருவதை உணர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, அந்த சக்திப் பற்றிய உண்மையை அறிய பாதிரியார் ஒருவரின் துணையோடு அந்த இடத்துக்குச் செல்கிறார்.

இருள் சூழ்ந்த வழியில் கடவுள் சக்தி இங்கே முடிகிறது என்ற ஒரு பெயர் பலகை ஒன்று தென்படுகிறது. தன் உயிரைப் பணயம் வைத்து மரண ஓலங்களுக்கும் கூக்குரல்களுக்கும் நடுவே அந்த ஆலயத்திற்குள் செல்கிறாள் அந்த கன்னியாஸ்த்திரி. அவளை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்து சட்டென திரும்ப, பட்டென வேறொரு உருவம் அவளைத் தாக்க, "மன்னிப்பு வேண்டுங்கள்" என்று எண்டு கார்டு போட்டு ட்ரெய்லரை முடிக்கிறார்கள்.

திகில் பட விரும்பிகள் இந்த ட்ரெய்லரைக் கண்டுவிட்டு, "இது வெறும் ட்ரெய்லர் தாம்மா, மெயின் பிக்சர் இனிமேதான்" என்று சகாக்களை இப்போதே திகிலூட்டலாம். திகில் பட வரிசையில், மக்களை பயமுறுத்தி, இந்தப் படம் வசூலை அள்ளுமா? என்பதை செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close