'ஸ்பைடர் மேன்' படத் தலைப்பை கசியவிட்ட நாயகன்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 12:34 pm

tom-holland-reveals-spider-man-2-title-far-from-home

'ஸ்பைடர் மேன்' அடுத்த பாகத்தின் படத் தலைப்பை ஹீரோவே கசியவிட்டது ஹாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பு முக்கியமான தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதில் அக்கறையாக இருப்பர். அதுவும் சீக்குவல் (தொடர்) படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எவ்வளவு கவனமாக இருந்தாலும், ஏதோ ஒரு வழியில் சில ரகசியங்கள் கசிவதுண்டு. 

ஆனால், அந்தப் படத்தின் நாயகரே வெளிப்படையாக ரகசியமாக வெளியிட்டு 'டோஸ்' வாங்கிய சம்பவம் ஹாலிவுட்டில் நடந்தேறியிருக்கிறது. 

அப்படி வெளியில் வந்த ரகசியம்தான் 'ஸ்பைடர் மேன்' சீரிஸின் அடுத்த படத்திற்கான தலைப்பு. இந்தப் படத்தின் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த நிலையில், ஸ்பைடர் மேனாக நடிக்கும் டாம் ஹாலண்டு சியாட்டில் நகரிலிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

படத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்று அவர் சொன்னாலும், அவர் கையில் இருந்த ஐ-பேட்டில் "ஸ்பைடர் மேன் - ஃபார் ஃப்ரம் ஹோம்" என்ற தலைப்பு ரசிகர்கள் கண்களில் சிக்கியது. 

"இன்ஃபினிட்டி வார் படத்தில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்திற்கு மரணம் ஏற்பட்டதால் அடுத்து இந்தப் படத்தில் என்ன நடக்கவிருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை" என்று கூறி தனது செய்தியை முடித்தார் ஹாலண்டு. 

படத்தின் தலைப்பை ஹாலண்டு வெளியிட்டது தற்செயலாக நடந்ததா? அல்லது பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட விஷயமா? என்பது கேள்விக்குறியே! ஜூலை 2019-ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் இந்தப் படம் நமக்கு இன்னும் ஃபார் ஃபரம் ஹோம் தான்.

தெரிந்தோ தெரியாமலோ படத்தின் தலைப்பை ஹீரோ வெளியிட்ட பிறகு, 'ஆம் அதுதான் தலைப்பு' என்று இயக்குநர் - தயாரிப்பு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.