டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் 6’ ரிலீசுக்கு ரெடி!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 11:27 am

tom-cruise-is-all-praises-for-superman

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாசிபிள்' பட வரிசையில் அதன் ஆறாம் பாகமான ‘ஃபால் அவுட்’ திரைப்படம் வரும் ஜுலை 27ல் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது.  

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்' என்கிற திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்தப் படத்தின் அபாரமான வெற்றி அடுத்தடுத்த பாகங்களை எடுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது. இதுவரை, 'மிஷன் இம்பாசிள்'  திரைப்படம் ஐந்து பாகங்களாக தயாராகி வந்து, அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

இந்நிலையில், 'மிஷன் இம்பாசிபிள்' பட வரிசையில் அதன் ஆறாம் பாகமாக ‘ஃபால்அவுட் ’ என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. இதில், டாம் குரூஸ் உடன் ஹென்றி கேவீல் வில்லனாக நடித்திருக்கிறார். சி.ஐ.ஏ உளவாளி ஆகஸ்ட் வாக்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் ஹென்றி கேவீல் நடிப்பை டாம் குரூஸ் பாரட்டியிருக்கிறார். இந்தப் படத்தை குவாரி என்பவர் இயக்கியிருக்கிறார். பாரவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இந்தியா முழுவதும் ’வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வரும் ஜுலை 27ல் இந்தியா முழுவதும் வெளியாகிறது.


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close