• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

மும்தாஜை கார்னர் செய்யும் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 2 & 3

  திஷா   | Last Modified : 12 Jul, 2018 03:01 pm

bigg-boss-promo-2

பிக்பாஸில் எப்போது தான் இந்த குழு சண்டை முடியப் போகிறதோ தெரியவில்லை. பாலாஜி, வைஷ்ணவி, ஜனனி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'ஏன் உங்களுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லையா, இவங்களுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லையா, வைஷ்ணவிய எதுத்து பேசுனாலும் சரி, ஜனனி ஐயர எதுத்து பேசுனாலும் சரி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிறார் பாலாஜி.

'அவங்க கத்தி பேசுறாங்க, எதுத்து பேசுறாங்க, அநியாயமா பேசுறாங்கன்னா, விட்றனும். நம்ம நம்ம செல்ஃப் ரெஸ்பெக்ட்ட காப்பாத்திக்க, அவங்கக் கிட்ட பேசக் கூடாது. அதத் தான் நான் பண்ணிட்டு இருக்கேன்' என பாலாஜிக்கு பதில் சொல்கிறார் வைஷ்ணவி. 

'எப்படி மும்தாஜ் நடிக்க முடியுது. உங்களுக்கு ஹேப்பி பர்த் டேன்னு கேக் வெட்டி சந்தோஷமா சாப்பிட்டுட்டு, அந்த வாயாலயே பேச எப்படி முடியுது' என வெளியில் அமர்ந்திருக்கும் டேனி மும்தாஜிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஃப்ரேமில் வைஷ்ணவியைக் கொண்டு வந்து காட்டுகிறார் பிக்பாஸ்..

அடுத்த ப்ரோமோவில், 'காலங்காத்தால காஃபிக்கு ஒரு 10 ரூபா குடுங்கன்னா, ஏன் எதுக்குன்னு கேக்குறாங்க, அவங்களுக்கு வேணும்ன்னா காசு குடுத்து வாங்கிக்கறாங்க, அப்போ நான் யாரு, நான் என்ன பண்ண' என சென்ட்ராயன் கோபமாக, 'இவ்ளோ தயிர் மண்டைல போட அவங்க 10 ரூபா கேக்குறாங்க. மண்டைல போட்டு குளிக்குறதுக்கு ஒருநாள் வெயிட் பண்ண முடியாதா' என்கிறார் மும்தாஜ். 

'யாரு எஸ்.ஐ, நான் தான எஸ்.ஐ அப்போ நான் சொல்றத தான நீங்க கேக்கணும்' என சென்ட்ராயன் கெத்து காட்ட 'நல்லா பேசுறதுன்னா பேசுங்க, இல்லைன்னா பேசாதீங்க' என சொல்லிவிட்டு நகர்கிறார் மும்தாஜ்.

'இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்குராய்ங்க' என்ற டைட்டிலில் 2-வது ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர் சேனல் தரப்பினர். யார் யாரை உசுப்பேத்துகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் பார்ப்போம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close