இந்தியாவில் மட்டும் 3 நாட்களில் 24 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம் !!! 

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 06:54 pm
ant-man-and-the-wasp-box-office-collection-rs-24-crore

ஆண்ட் மேன் அண்டு தி வாஸ்ப் , பேய்ட்டின் ரீட் இயக்கத்தில் மார்வல் காமிக் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 24.74 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் 3 நாட்களில் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்ததே வியக்கத் தக்க விஷயம் தான். 

அவென்ஜ்ர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்கு அடுத்து இந்திய திரையரங்குகளில் நல்ல வரவேற்பும், மக்களின் எதிர்பார்ப்பும் அதிக அளவில் பெற்ற ஒரே திரைப்படம் ‘ஆண்ட்மேன் அண்டு தி வாஸ்ப்’. மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சின் தயாரிப்பில் இது 20-வது திரைப்படமாகும். பவுல் ரூட், இவாஞ்சலின் லில்லி ,ஹென்னாஹ் ஜான், மைக்கல், லாரன்ஸ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். “2018 ஆம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவிற்கு நல்ல காலம் போல் தெரிகிறது, திரைப்படம் வெளியான முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூலில் துவங்கி இன்று 24 கோடி வசூலித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.”என்று கூறுகிறார் வர்த்தக ஆய்வாளர் டரன் ஆதர்ஷ். 

பொதுவாகவே இந்தக் கால இளைஞர்களுக்குச் சூப்பர் ஹீரோ படங்களின் மீது ஈர்ப்பு அதிகம். அதை நன்கறிந்த பேய்ட்டன் ரீட், திரைப்படக் காட்சிகளைச் சுவாரஸ்யமாக அமைத்துள்ளார். உலகத் திரையரங்குகளில் ஜூலை 13ம் தேதி வெளியான ‘ஆண்ட்மேன் அண்டு தி வாஸ்ப்’ திரைப்படம் பலராலும் நல்ல விமர்சனங்களையே பெற்றுவருகிறது. என்ன தான் டிஸ்னி தயாரிப்பின் ஜங்கிள் புக் திரைப்படம் மிகச் சிறந்த ஹாலிவுட் ஹிட்டாக இருந்தாலும் அதை முறியடித்தது மார்வெல் திரைப்படமான அவென்ஜ்ர்ஸ். தற்போது உலக அளவில் 237 மில்லியன் டாலர் வசூல் பெற்ற ‘ஆண்ட்மேன் அண்டு தி வாஸ்ப்’ திரைப்படமானது ஹாலிவுட் சினிமா உலகிற்கே புதிய சாதனையை உருவாக்கும் எனக் கூறலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close