உலகில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர் 'தி ராக்' டுவைன் ஜான்சன்

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 11:48 am
the-rock-is-the-highest-paid-actor-of-all-time-according-to-forbes

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகளவில் சினிமாத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில்  'தி ராக்' டுவைன் ஜான்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகம் முழுவதிலும் உள்ள அதிக வருமானம் பெறும் 100 பிரபலங்கள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2018ம் ஆண்டிற்கான இப்பட்டியலை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2017 ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த பிரபலங்களின் வருமானத்தை கணக்கிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, ஒட்டு மொத்த துறைகளில், கடந்த ஆண்டு 22வது இடத்தில் இருந்த ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் இந்த ஆண்டு 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் சினிமாத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் அவர் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் 124 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 850 கோடி ரூபாய்) வருமானமாக ஈட்டியுள்ளார்.

ஒரே ஆண்டில், 22வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு உயர்ந்திருப்பதன் பின்னணியில்  Jumanji: Welcome to the Jungle படத்தின் பிரம்மாண்ட வெற்றியும் பங்காற்றியிருப்பதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. டுவைன் ஜான்சன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான அந்த படம் சுமார் 6,500 கோடி ரூபாயும்,  ராம்பேஜ் படம் சுமார் 3,000 கோடியும் வசூல் செய்துள்ளது.

இது தொடர்பாக டுவைன் ஜான்சன் கூறும்போது, “இது எதிர்பாராத செய்தி, என்னிடம் ஹார்வர்ட் எம்.பி.ஏ பட்டம் இல்லை, என்னுடைய வணிக கொள்கை பல ஆண்டுகளில், தோல்விகள் மூலம் பட்டை தீட்டப்பட்டுள்ளது. நான் ஒரே ஒரு முதலாளிக்காக மட்டுமே பணியாற்றுகிறேன், அது மக்கள் மட்டுமே. 7 டாலர் மாத ஊதியத்தில் பணியாற்றிய நான் இன்று 850 கோடி ரூபாய் வருமானம் பெறும் நபராக மாறியிருக்கிறேன், இது தொடரும்” என்றார். 

அதிகம் வருமானம் பெறும் 100 பிரபலங்கள் பட்டியலில் இந்திய நடிகர்களான அக்‌ஷய் குமார் 76வது இடத்திலும், சல்மான் கான் 82வது இடத்திலும் உள்ளனர். ஷாருக் கான் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close