ஹாலிவுட் திரைவிமர்சனம் - தி ராக்-கின் 'ஸ்கைஸ்க்ரேப்பர்'

  Newstm News Desk   | Last Modified : 21 Jul, 2018 05:08 am

dwayne-johnson-s-skyscraper-movie-review

ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் ட்வெயின் 'தி ராக்' ஜான்சன், நெவ் காம்பெல், சின் ஹான் நடிப்பில் வெளியாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் 'ஸ்கைஸ்க்ரேப்பர்'.

பாஸ்ட் அண்ட் தி பியூரியஸ், ஜுமான்ஜி, சான் ஆண்ட்ரியாஸ் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள ராக், சமீபத்தில், உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கி வரும் இவர் நடிக்கும் படங்கள், வசூலை வாரி குவித்து வருகின்றன. மோசமான விமர்சனங்களை பெற்ற 'ராம்பேஜ்' திரைப்படம் கூட, உலகம் முழுவதும் சுமார் 3000 கோடி வசூலை குவித்தது.

அடுத்ததாக, வானுயர கட்டிடத்தில் ஏற்படும் பேரிடரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ஸ்கைஸ்க்ரேப்பர். குண்டு வெடிப்பில் ஒரு காலை இழந்துவிடுகிறார் ராக். அதன்பின், மனைவி குழந்தைகள் என அமைதியாக வாழ்க்கையில் இருக்கும் அவர், வேலை நிமித்தமாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் பாதுகாப்பானதா என சோதனை செய்ய செல்கிறார். அப்போது அந்த கட்டிடத்தை சில மர்ம நபர்கள் தீ வைத்து நாசமாக்க முயற்சிக்கின்றனர். கட்டிடத்தில் இருக்கும் தனது குடும்பத்தை காப்பாற்றுகிறாரா?, வில்லன்களை வீழ்த்தினாரா என்பது தான் கதை.

225 மாடிகளுடன், மிக உயர்ந்த கட்டிடத்தை கிராபிக்ஸில் ரொம்பவே தத்ரூபமாக காட்டியுள்ளனர். எல்லா படத்திலும் வில்லன்களை ராக் எளிதாக அடித்து துவைத்து விடுவார் என்பதால், இந்த படத்தில், ஒரு கால் இல்லாத ஊனமுற்றவராக தோன்றுகிறார். பார்க்க கொஞ்சம் புதிதாக உள்ளது. சில காட்சிகளில், கால் இல்லாமல் அவர் செய்யும் சாகசங்கள் கவருகின்றன. 

பெரிய பெரிய டிவிஸ்ட்கள் இல்லாமல், எதிர்பார்த்தது போலவே நகருகிறது படம். ஆனால், ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே சிறப்பு. கிரேனில் இருந்து கட்டிடத்திற்குள் குதிப்பது, கட்டிடத்தின் வெளியே ஏரிச் செல்வது, தொங்குவது, போன்ற காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. இது போன்ற காட்சிகளுக்காக படத்தை நிச்சயம் திரையில் பார்க்கலாம்.

சிறப்பான பின்னணி இசை மற்றும் கேமரா படத்திற்கு வலு சேர்க்கிறது. போதுமான அளவு விறுவிறுப்பு, ஆக்ஷன், த்ரில் எல்லாமே இருந்தாலும் கூட, படத்தின் கதை சற்று வழக்கமானது என்பது தான் ஒரே மைனஸ். 

2 மணி நேரம் தொய்வில்லாமல் செல்லும் ஒரு என்டர்டெய்னர் படம். 

 

நம்ம ரேட்டிங் - 3/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.