ஹெராயின் ஓவர்டோஸ்; பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 08:53 am
demi-lovato-rushed-to-hospital-after-drug-overdose

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் பாடகி டெமி லொவாட்டோ, அதிகப்படியாக போதைப் பொருள் உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல ஆல்பங்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற டெமி லொவாட்டோ, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, சமீப காலமாக அதிலிருந்து விடுபட கடுமையாக போராடி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம், அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் எடுத்துக் கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு 25 வயது பெண்ணை, ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக அந்த பகுதியின் காவல்துறை தெரிவித்தது. அது பாடகி டெமி லொவாட்டோவா என உறுதி செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர்.

பின்னர், பாடகியின் செய்தித் தொடர்பாளர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது டெமி தான் என உறுதி செய்தார். சிகிச்சைக்கு பின் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், குடும்பத்தினரின் அரவணைப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close