ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ப்ரூஸ் லீ படம்!

  திஷா   | Last Modified : 26 Jul, 2018 08:29 pm
bruce-lee-s-enter-the-dragan-remake

இயக்குநர் ராபர்ட் க்ளவுஸ் இயக்கத்தில் 1973-ம் ஆண்டு வெளியானப் படம், 'என்டர் தி ட்ராகன்'. இதில் ஹீரோவாக ப்ரூஸ் லீ நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் வெளியாகும் போது அவர் உயிரோடு இல்லை. அவரின் மரணத்துக்குப் பின் வெளியான இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் அதிக வரவேற்பளித்தார்கள்.  தற்போது இந்த என்டர் தி ட்ராகன் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

இதற்கு முன் ஸ்பைக் லீ, ப்ரட் ரேட்னர் ஆகியோர் இதனை ரீமேக் செய்வதற்காக அணுகப்பட்டார்கள். ஆனால் இப்போது டேவிட் லிட்சை அணுகியிருக்கிறதாம் வார்னர் பிரதர்ஸ்.

'அடாமிக் பிளான்ட்', 'டெட் பூல் 2' ஆகிய படங்களை இயக்கியவர் டேவிட் லிட்ச். இப்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஸ்பின் ஆஃப் படமான `ஹாப்ஸ் அண்ட் ஷா' படத்தின் வேலைகளில் இருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close