ஆங்கில சீரியல் முடிந்தது....பாலிவுட் பக்கம் வருவாரா பிரியங்கா? 

  Padmapriya   | Last Modified : 05 Aug, 2018 11:03 am

priyanka-chopra-confirms-her-exit-from-quantico-is-nick-the-reason-once-again

பிரியங்கா சோப்ரா அமெரிக்க தொலைக்காட்சிக்காக நடித்து வந்த 'குவான்டிகோ' என்ற த்ரில்லர் சீரியல் முடிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, 'மை சிட்டி' என்ற பெயரில் ஆல்பன் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆல்பம், இந்தியாவை விட சில அமெரிக்க இசைக்கலைஞர்களை ஈர்த்தது. அதனால் அவருக்கு பல ஹாலிவுட் பட வாய்ப்புகள் வரத்தொடங்கியது. 

அதில் ஆங்கில சீரியலில் அமெரிக்க புலனாய்வு அதிகாரியாக வலம் வர, அமெரிக்க தொலைக்காட்சியான ஏபிசி பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்தது. 2015ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா 'குவான்டிகோ' என்ற அந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்மூலம் ஹாலிவுட்டில் தயாராகும் தொலைக்காட்சி தொடரில் அதுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை என்ற புகழை அவர் பெற்றார். 

தற்போது ஏபிசி தொலைக்காட்சியில் மூன்று சீசன்களை ஒளிப்பரப்பாகி வரும் இந்த தொடர்ந்து விரைவில் முடிவடையவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. 

இதை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள ப்ரியங்கா, இதுவரை 'குவான்டிகோ'  தொடருக்கும், தனக்கும் ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 'குவான்டிகோ' குழுவினரை விட்டு பிரிவது வருத்தமாக உள்ளதாகவும் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தொடரில் பிரியங்கா சோப்ரா எஃப்பிஐ ஏஜென்ட் கதாபாத்திரத்தில் அலெக்ஸ் பாரிஷுடன் நடித்திருந்தார். 'குவான்டிகோ' தொடர் அமெரிக்க ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தத் தொடருக்காக பிரியங்கா நியூயார்க் நகரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.  இதனால் பாலிவுட் படங்களில் அவர் எட்டிக் கூட பார்க்கவில்லை. 

இதே சூழலில், ஹாலிவுட் பாப் இசைப் பாடகரும் தனது சிறு வயது நண்பருமான நிக் ஜோனாஸை பிரியங்கா விரைவில் மணக்க உள்ளார். நியூயார்க்கில் இவர்களுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   

தொடர்புடையவை: 11 வயது இளைய அமெரிக்க பாடகருடன் திருமணம்: விமர்சனத்துக்கு ஆளான பிரியங்கா!  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.