வில் ஸ்மித்தை சந்தித்த இசைப்புயல்

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2018 05:58 pm
a-r-rahman-met-will-smith-viral-pic

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது சர்கார், செக்க சிவந்த வானம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்று செம பிசியாக இருக்கிறார். மேலும் அவர் கதை எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் படத்தின் வேலைகளும் நடந்து வருகிறது. 


இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது மனதுக்கு நெருக்கமான விஷயம் குறித்து வில் ஸ்மித்துடன் பேசியதாகக் கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், டிசம்பர் மாதம் இசைக் கச்சேரி என்று ஒரு குறிப்பும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதனால், வில் ஸ்மித்துடன் ரஹ்மான் எது குறித்து பேசினார் என்பதை அறிந்துகொள்ள டிசம்பர் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். மேலும் சென்னையில் நடைபெற உள்ள கே.எம்.எம்.சியின் இசைக்கச்சேரிக்கு வில் ஸ்மித் வரயிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close