பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்

  கனிமொழி   | Last Modified : 07 Sep, 2018 08:57 pm
popular-hollywood-actor-passes-away

பிரபல ஹாலிவுட் நடிகரான பர்ட் ரேனல்ட்ஸ் நெஞ்சு வலி காரணமாக 82 வயதில் காலமானார். அமெரிக்காவின் ஃப்லோரிடாவில் இருக்கும் மருத்துவமனையில் ரேனல்ட்ஸ் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நெஞ்சு வலி காரணமாக நேற்று காலமாகியுள்ளார். 

ரேனல்ட்ஸ் 1997 வருடம் நடித்த 'பூகி நைட்ஸ்' என்ற திரைப்படத்துக்காக கோல்டன் க்ளோப்ஸ் மற்றும் பல விருதுகளை வாங்கினார். இவர் ஆஸ்கர் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார். 

1970-களில் ரேனல்ட்ஸ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 'ஸ்மோக்கி அண்டு தி பண்டிட்','ஸ்டார்ட்டங் ஓவர்', 'தி பெஸ்ட் லிட்டில் வேர்ஹவுஸ் இன் டெக்சாஸ்' போன்றவைகள் இவர் பட்டியலில் உள்ள சில ஹிட் படங்கள் ஆகும்.

இதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ரேனல்ட்ஸ், 'புதிய இயக்குநர்களுடன் நான் வேலை செய்ய விரும்பவில்லை. ஒரு நடிகனாக புதுப் புது விஷயங்களை செய்ய நான் ஆர்வம் காட்டவில்லை. மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன். இந்த முடிவினால், நான் ஒரு நல்ல நடிகன் என்று காட்ட தவறிவிட்டேன்' என்று எழுதியுள்ளார். இவர் மறைவை அடுத்து ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் ரேனல்ட்ஸ்க்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close