எம்மி விருதுகளை அள்ளிய 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 04:42 am
game-of-thrones-win-big-in-emmy-s

ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்படும் எம்மி விருது நிகழ்ச்சியில் பிரபல 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர், 9 முக்கிய விருதுகளை அள்ளிச் சென்று படைத்தது.

உலகிலேயே மிக பிரபலமான தொலைக்காட்சி தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இந்த தொடர், விருதுகள், பார்வையாளர்கள் எண்ணிக்கை என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி  வரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ், அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான கேம் ஆஃப் த்ரோன்ஸ் 7வது சீசன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொலைகாட்சியின் ஆஸ்கர் என அழைக்கப்படும் எம்மி விருதுகள் கடந்த ஞாயிறு அன்று வழங்கப்பட்டன. இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ், 22 பிரிவுகளில்  தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறந்த டிராமா தொடர், துணைநடிகர் என இரண்டு முக்கிய விருதுகளையும், இசை, கிராபிக்ஸ் உட்பட 7 தொழில்நுட்ப விருதுகளையும் சேர்த்து மொத்தம் 9 விருதுகளை அள்ளிச் சென்றது கேம் ஆஃப் த்ரோன்ஸ்.

அதேபோல 'மார்வெல்லஸ் மிஸ்ஸஸ் மெய்ஸல்' என்ற காமெடி தொடருக்கு, சிறந்த காமெடி தொடர், சிறந்த நடிகை, துணை நடிகை, எழுத்து, இயக்கம் என முக்கிய 5 விருதுகளும், 3 தொழில்நுட்ப விருதுகளும் வழங்கப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close