ஜேம்ஸ் பாண்டின் 25-வது பட அப்டேட்

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 06:09 am
james-bond-25th-movie-updates

2020 வருடம் காதலர் தினத்தன்று  ஜேம்ஸ் பாண்டின் 25-வது படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது, ஜேம்ஸ் பாண்டின் 25-வது படம் உருவாகவிருக்கிறது. முதலில், இந்த படத்தை இயக்குநர் டேனி பாயில் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது.

பின், சில காரணங்களால் டேனி பாயில் விலகினார். தற்போது, இப்படத்தை இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுனாகா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் க்ரெயிக் நடிக்கவுள்ளாராம். ஏற்கெனவே, 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேனியல் க்ரெயிக் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு  மார்ச் 4ம் தேதி துவங்கவுள்ளனர். படத்தை 2020ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close