மிஷன் இம்பாசிபிள்- 6: டாம் குரூஸின் அபுதாபி அப்டேட்!

  Padmapriya   | Last Modified : 29 Mar, 2018 08:31 pm

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 6-ஆம் பாகம் குறித்து துபாயிலிருந்து ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

மிஷன் இம்பாசிபிள், ஹாலிவுட்டில் ஹிட்டான இந்தப் படத்தின் 6-வது பாகம் அபுதாபி, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. கிறிஸ்டோபர் மிக்குவாரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அது குறித்த அப்டேட்டை தான் டாம் குரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மிஷன் இம்பாசிபிள் படத்தின் 5 பாகங்கள் இதுவரை வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், விறுவிறுப்பாக உருவாகி வந்த மிஷன் இம்பாசிபிள் 6-வது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதை இங்கிருந்து கூறிக்கொள்கிறேன் என்றார்.

பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சி கடந்த ஒரு மாதமாக அங்கு நடந்த படப்பிடிப்பு முடிந்து, டாம் குரூஸிடமிருந்து ட்வீட் வந்தது ஹாலிவுட் ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது. ரசிகர்களை கவரும் வகையில், மாபெரும் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் டாம் குரூஸ், 25,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு சண்டை செய்யும்படியான காட்சி படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

அணில் கபூருடன் சந்திப்பு அணில் கபூர் தற்போது ரேஸ் - 3 படத்துக்கான ஷுட்டில் உள்ளார். டாமும் அபுதாபியிலிருப்பதை தெரிந்துகொண்ட அணில் கபூர், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் தந்துள்ளார். இருவரும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் 4ம் பாகத்தில் சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close