இந்த அவமானம் தேவையா? கோல்டன் குளோப் சிறந்த நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 06:58 pm

golden-globes-best-actor-snubbed-by-nicole-kidman

சமீபத்தில் நடைபெற்று முடிந்த கோல்டன் குளோப் ஹாலிவுட் விருதுகள் விழாவில், சிறந்த நடிகர் விருது பெற்ற ரமி மாலெக், மேடையில் ஒரு நடிகையிடம் பேச முயற்சித்து அவமானப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹாலிவுட் திரையுலகில் ஆஸ்கர் விருதுகளுக்கு பிறகு மிகவும் பிரபலமான விருதுகள் கோல்டன் குளோப் விருதுகள் தான். கடந்த வாரம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் விழாவில், 'பொஹீமியன் ராப்சடி' திரைப்படம் சிறந்த டிராமா திரைப்படத்திற்கான விருதை பெற, அதில் நடித்த ரமி மாலெக் சிறந்த நடிகர் விருதை பெற்றார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை, பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் வழங்கினார். 

அப்போது மேடைக்கு வந்த படக்குழுவினர் விருதை பெற்றனர். சிறந்த நடிகர் விருதை பெற்ற ரமி மாலெக், மேடைக்கு வந்து, நடிகை நிக்கோல் கிட்மேனுடன் கைகுலுக்க முயற்சித்தார். ஆனால், அவரை கவனிக்காமல் நிக்கோல் திரும்பிக் கொண்டார். தொடர்ந்து அவர் பின்னே சென்று பேச முயற்சித்த போதும், மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்த நடிகை அவரை கவனிக்கவில்லை. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. நடிகர் மாலெக்கை கிண்டல் செய்து மீம்ஸ் உருவாக்கி நெட்டிசன்கள் கலாய்த்தனர். 

சிறந்த விருது பெற்றதை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாலெக் கலந்து கொண்டார். அதில் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் கிம்மல், மாலெக்கிடம், மேடையில் நடந்த சம்பவத்தின் வீடியோவை போட்டு காட்ட, மாலெக் சங்கடத்துடன் முகத்தை மூடிக் கொண்டார். பின்னர்,  "இணையதளத்தில் என்னை வெச்சு செய்கிறார்கள் தானே. பரவாயில்லை சமாளிச்சுக்கலாம்" என சிரித்துக் கொண்டே சொல்லி விடைபெற்றார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.