சங்கு சக்கரம்–திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 30 Dec, 2017 10:37 am


நட்சத்திரங்கள்–கீதா, திலீப்சுப்புராயன், ‘அவன்இவன் ’ராம ராஜ், மோனிகா, தீபா, ஜெனிபர், பாலா, நினேஷ், தேஜா, கிருத்திக், ஆதித்யா, அஜீஸ், ஆதர்ஷ், ராஜா, பிரதீப், ராக்கி, ஜெர்மி ரோஸ்கி, இசை-ஷபீர், ஒளிப்பதிவு-ரவிகண்ணன், இயக்குநர்-மாரிசன், தயாரிப்பு-லியோ விஷன், சினிமா வாலா பிக்சர்ஸ்.          

பணத்துக்காக எந்த மகா பாவத்தையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதர்கள், பேய் பங்களாவுக்குள் சிக்கிக் கொண்டு படும் துயரத்தை காமெடியுடன் சொல்லும் திகில் படம்.  

பணம் பறிக்கும் நோக்கத்தில் குழந்தைகளை கடத்தும் திருடன், பல கோடி சொத்துக்கு ஒரே வாரிசான சிறுவனை கடத்தும்  பாதுகாவலர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பங்களாவை விற்று பிளாட் போடத் துடிக்கும்  ரியல் எஸ்டேட்காரர், காதலியை தனியாக அழைத்து வரும் காதலன்... இவர்கள் எல்லோரும் ஒரு பேய் பங்களாவுக்குள் சிக்கிக்கொள்ள அங்கிருக்கும் பேய் அவர்களை என்ன செய்தது? குழந்தைகள் கதி என்ன ஆனது? என்பதை கதை. 

பணத்துக்காக எந்த மகா பாவத்தையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதர்களால், பேய் பங்களாவுக்குள் சிக்கிக் கொள்ளும் குழந்தைகள் படும் சிரமத்தை திகில் பின்னணியில் குதூகலமாக சொல்லும் இயக்குநர் மாரிசன், ‘பணத்துக்காக பேயாய் அலையும் மனிதர்கள் தான், பேய்-பிசாசைக் காட்டிலும் பயங்கரமானவர்கள்’ என்கிற சிறந்த மெசேஜ் சொல்லியிருக்கிறார். ஆனால், பேய் படங்களில் வழக்கமான  வரும் காட்சிகள் இதிலும் தவறாமல் வருவதால் அலுப்புத்தட்டுகிறது. 

பல படங்களில் வில்லனாக வந்து மிரட்டும் திலீப் சுப்பராயன் இதில்  காமெடி வில்லனாக கலக்கியிருக்கிறார். பேய் பங்களாவில் மாட்டித்  தவிக்கும் அவரின் பாடி லாங்குவேஜ் ரசிக்கும்படி இருக்கிறது. கீதா அழகான பேயாக வந்து மிரட்டுகிறார். குழந்தைகளை ஏமாற்றி பேய் பங்களாவுக்குள் அழைத்து வரும் ‘அவன் இவன்’ ராம ராஜ் நல்லவராக மாறி மனதில் இடம் பிடிக்கிறார். குட்டீஸ் செய்யும் குரும்புத்தங்கள் குதூகலப்படுத்துகிறது. அதிலும், கிளைமாக்ஸில் ஒரு அதிரடிக் கேள்வியைக் கேட்டு பேயையே மிரளவைக்கும் ‘பசங்க’ நிஷேஷ், அழகு குட்டிப் பிசாசு மோனிகா இருவரும் கவனத்தில் பதிகின்றனர்.

பேய் படங்களுக்கு தேவையான மிரட்டும் பின்னணி இசையை தந்திருக்கிறார் சபீர். ஒளிப்பதிவாளர் ரவி கண்ணன், காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறார். குழைந்தைகளை குதுகலிக்க செய்யும் `சங்கு சக்கரம்' படத்துக்கு ரேட்டிங்  2.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.