மனுஷனா நீ – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 17 Feb, 2018 10:03 am


நட்சத்திரங்கள் : ஆதர்ஸ், அனு கிருஷ்ணா, கஸாலி, சுப்பு பஞ்சு, குணா  ஒளிப்பதிவு : அகரன், இசை-இயக்கம்-தயாரிப்பு : கஸாலி.     

தமிழ் நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து திடீர் திடீரென இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். இதை கண்டுபிடிக்க போலீஸ் ஒரு குழு அமைக்கிறது. 

இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷ், நாயகி அனு கிருஷ்ணா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஆதர்ஷின் அப்பாவுக்கு சொந்தமான ரைஸ் மில்லை அபகரிக்க நினைக்கும் உள்ளூர் தாதா சுப்பு பஞ்சுவுடன் மோதும் ஆதர்ஷ், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆதர்ஷுக்கு மருத்துவமனையின் டீன் கஸாலி ஒரு மருந்து செலுத்தி அனுப்புகிறார். பிறகு ஆதர்ஷ், திடீரென அபார சக்தியுடன் வந்து சுப்பு பஞ்சுவையும், அடியாட்களையும் அடித்து நொறுக்குகிறார். 

சில நாட்களில் அவரது முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என்று போலீஸ் கண்டுபிடிக்கிறது. ஆதர்ஷின் உடம்பினுள் கஸாலி என்ன மருந்து செலுத்தினார்? அதற்கு காரணமென்ன?  இளைஞர்கள் காணாமல் போவதன் மர்மம் என்ன? என்பது மீதிக்கதை.


தான் உண்டு, தன் காதல் உண்டு என அனு கிருஷ்ணாவையே வட்டமடித்துக் கொண்டிருந்த நாயகன் ஆதர்ஸ், ஆஸ்பத்திரிக்கு போய் திரும்பியதும் அசுரன் போல மாறுவதும், பிறகு முகத்தில் மற்றம் ஏற்படுவதுமான காட்சிகள் மிரள வைக்கிறது. நாயகி அனுகிருஷ்ணாவுக்கு நாயகனை லவ் பண்ணுவதைத் தவிர வேறு ஆணி எதையும் புடுங்கவில்லை! உள்ளூர் தாதாவாக வந்து உறுமும்   சுப்பு பஞ்சு நடிப்பு சப்பென்று ஆகிவிடுகிறது. இளைஞர்களை கடத்தும் கும்பலில் வரும் குணாவும், சகாக்களும் கொடுத்தவேலையை சரியாக செய்திருக்கிறார்கள். எழுதி, இசையமைத்து, இயக்கி, தயாரித்து, வில்லனாகவும் நடித்திருக்கும் கஸாலிக்கு முரட்டு தைரியம்!     மருத்துவ துறையில் இருக்கும் மெடிக்கல் மாஃபியாவை க்ரைம் திரில்லர் பின்னணியில் சொல்ல நினைத்த கஸாலி, அதை இப்படியா சொதப்புவது! கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு... என எதிலுமே போதிய அனுபவமோ, திறமையோ இல்லாமல் ஆர்வக்கோளாறில் வருபவர்கள் எடுக்கும்படம் எப்படியிருக்கும்  என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம்!  ரேட்டிங் 1.5/5  


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close