ரஜினி - கமல் மீது பாரதிராஜா பாய்ச்சல்!

  பால பாரதி   | Last Modified : 30 Apr, 2018 03:59 pm


”எழுதி கொடுத்த வசனத்தை படித்த நடிகனுக்கு, கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என வளர்த்துவிட்டதால், ரசிகனை முட்டாளாக நினைத்து, நாட்டை ஆளப்போவதாக சொல்லி கிளம்பிவிடுகிறார்கள்” என படவிழாவில், ரஜினி - கமல் இருவரையும் மறைமுகமாக தாக்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

 'மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ போன்ற படங்களை இயக்கிய யுரேகா, தற்போது ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் புதுமுகங்கள் ஜெய்வந்த், ஐரா நடித்திருக்கும் இந்தப் படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இன்று காலை நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குநர் பாரதிராஜா தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். 

“இந்தப் படத்துக்கு ‘கெட்டப்பய சார் இந்த காளி’ என தலைப்பு வைத்திருக் கிறார்கள்.இதில், எனக்கு உடன்பாடு இல்லை! இப்படி எல்லாம் தலைப்பு வைத்து நடிகர்களை நாம் தூக்கி விடுகிறோம். 


அப்படி பண்ணு, இப்படி பண்ணு என்று சொல்லி விடுகிறோம்.எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களை பாடிய நடிகனுக்கு, கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என வளர்த்து விடுகிறோம். அப்படி வளர்த்துவிட்ட ரசிகனை முட்டாளாக நினைத்து, ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, நாட்டை ஆளப்போவதாக சொல்லி கிளம்பிவிடுகிறான் அந்த நடிகன்! அவர்களை எல்லாம் அப்போவே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். எல்லாம் நாம் செய்த தவறுதான்.

இப்படத்தின் இயக்குநர் யுரேகாவின், முந்தைய படைப்புகளை பார்த்திருக்கிறேன். சினிமா உலகிற்கு வந்தோமா போனோமா என்று இல்லாமல், எதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் இயக்குநர் பாரதிராஜா.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close