இரும்புத்திரை - திரை விமர்சனம்

  SRK   | Last Modified : 11 May, 2018 05:54 pm


விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இரும்புத்திரை இன்று வெளியாகியுள்ளது. அரசியலில் இறங்கிய பின் விஷால் நடிக்கும் முதல் படம் என்பதால், படத்தில் அரசியல் வசனங்கள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.

ராணுவ உயரதிகாரி விஷால், தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பலிடம் சிக்கி படாத பாடு படுகிறார். அந்த கும்பலின் தலைவனாக வந்து மிரட்டும் அதிபுத்திசாலி ஹேக்கர் அர்ஜுனை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் ஒன் லைன். 

பேஸ்புக், இணைய பேங்கிங், ஜிபிஎஸ், ஆதார் என இன்று பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பல நவீன யுக்திகளை எப்படி தவறாக பயன்படுத்த முடியும் என்பது பற்றிய வசனங்களுடன், விஷால் ஸ்லோ மோஷனில் நடந்து வரும் ஒரு 1 மணி நேர ரீலை சேர்த்தது தான் இந்த இரும்புத் திரை.


தனி ஒருவன் பாணியில் வில்லனை ஹேண்ட்சம்மாகவும், மிகப்பெரிய வித்தகராகவும் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அவர் செய்யும் டெக்னிக்குகளோ 10 வருடங்களுக்கு முன்னாலேயே பார்த்து புளித்து போன ஹேக்கிங் வித்தைகள். 

ஆதார் தகவல் திருட்டை வைத்து பல வசனங்கள், ஆனால், காட்சிகளோ கோமாளித்தனமாக உள்ளன. பெரிய அளவு டெக்னலாஜி தெரியத நமக்கே, அதை பார்க்கும் போது கோபம் வருகிறது. படத்தின் மைய அமைப்பான இணைய தகவல் திருட்டுகள் கொண்ட காட்சிகளில் கூட வெறும் பில்ட் அப் மட்டுமே உள்ளன.

சமந்தாவுடனான ரொமான்ஸ் பெரிய அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆக்ஷன் காட்சிகள் ஓகே. யுவன் இசை படத்திற்கு பெரிய பலம். விஷால் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். டெல்லி கணேஷ் நடிப்பு சூப்பர். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை பற்றி இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து காட்சிகளாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மத்திய அரசின் ஆதார் திட்டத்தை பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பார்க்கிறார்கள். இதுவரை ஆதார் தொடர்பாக எழுந்த ஹேக்கிங் சர்ச்சைகளில் ஏதாவது ஒன்றை கூட காட்டியிருக்கலாம். ஆனால், இவர்களோ ஒரு பென் ட்ரைவில், இந்தியாவில் உள்ள நூறு கோடி பேரின் ஆதார் தகவல்களையும் ஏதோ MP3 பாடல்களை போல காப்பி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

மொத்தத்தில் படம் டெக்னாலஜியே இல்லாத ஒரு டெக்னாலஜி படம். ஆனால், வேகமாக நகர்வதாலும், மக்களுக்கு இணைய மோசடிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்ததாலும், எக்ஸ்ட்ரா மார்க்ஸ்! 

நம்ம ரேட்டிங்: 3/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.