'காலா’ எப்படி இருக்குது? - ரசிகர்கள் விமர்சனம் 

  பால பாரதி   | Last Modified : 07 Jun, 2018 10:14 am
rajini-s-kaala-movie-fans-review

மிகப்பெரிய எதிர்பார்போடும், ஆவலோடும் காத்திருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே, பல்வேறு சிக்கல்களைக் கடந்து, தடைகள் அத்தனையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கிவிட்டு வெளிவந்திருகிறது ’காலா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியிருக்கும் ’காலா’ திரைப்படம்  இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. உலகம் உலக அளவில் உள்ள ரஜினி ரசிகர் படை,  ’காலா’வை ஹிட்டாக்கும் தீவிரத்தில் இருக்கிறது. 

தனுஷின் வொண்டர் பார் பட நிறுவனத்தின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும்  'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

நெல்லை சீமையிலிருந்து, மும்பைக்கு சென்ற ஒரு மனிதன், அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடித்து, அந்த மக்களுக்காக போராடும் தலைவனாக மாறுவதைப் பற்றிப் பேசும் ’காலா’ படத்தைப் பற்றி ரசிகர்கள் கருத்து இதோ...!   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close