ஆந்திரா மெஸ் - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 23 Jun, 2018 04:26 pm

andhra-mess-movie-review

டான் கதையை, பிளாக் காமெடியில் சொல்லியிருக்கிறார்கள்!

நண்பர்களான ஏ.பி.ஸ்ரீதர், ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோர் தேவராஜ் என்கிற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். ஒரு தருணத்தில், நண்பர்கள் தாதாவிடமிருந்து பிரிவதற்கு முடிவெடுக்கின்றனர். வாங்கிய கடனை திருப்பித் தரும்படி சொல்கிறார் தாதா. ஆனால் நண்பர்கள், கடனைத் தர முடியாமல் தவிக்கிறார்கள்! ‘ஒரு பெட்டியை தூக்கி வந்தால், கடனை திருப்பி தரவேண்டாம்’ என்கிறார் தாதா. கூட்டாளிகள் சேர்ந்து அந்தப் பெட்டியைத் தூக்குகின்றனர். அந்தப் பெட்டி நிறையப் பணம் இருப்பதைப் பார்த்து மனம் மாறும் நண்பர்கள், பெட்டியோடு ’எஸ்கேப்’ஆகின்றனர். வட நாட்டில் ஒரு மலைக் கிராமத்தில் ஜமீன்தார் வீட்டில் தஞ்சமடைகின்றனர். அங்கே ஜமீன்தாரின் அழகிய மனைவியோடு, ராஜ் பரத்துக்கு காதல் மலர்கிறது. இன்னொரு பக்கம் அவர்களை, தாதா தேட்டிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள், ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? தாதாவின் பிடியில் சிக்கினார்களா? என்பது மீதிக் கதை.

நண்பர்களாக வரும் ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பாலாஜி, மதி என எல்லோருமே புதுமுகங்கள். இவர்களில் முரட்டுத் தோற்றம் கொண்ட ஏ.பி.ஸ்ரீதர், ஹீரோ லுக்கில் இருக்கும் ராஜ் பரத் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். இதில் நடிகராக அறிமுகமாகி இருக்கும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், அதிகம் பேசாமல், ஆர்ப்பாட்டம் பண்ணாமல் முரட்டுத் தோற்றத்தில், பார்வையாலேயே பதற வைக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு வில்லன் கிடைத்திருக்கிறார். நண்பர்களாக வரும் பாலாஜியும், மதியும் சொன்னதை செய்யும் கிளிப்பிளைகள்! அடிக்கடி ’கேஸ்’ விடும் மதி, அதிகம் ரசிக்க முடியவில்லை!

ஜமீன்தாருக்கும் இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட தேஜஸ்வினி கண்கள் வழியாகவே காதல் மொழி பேசுகிறார். மதியின் காதலியாக வரும் பூஜா, கதையில் ஆறாம் விரல் போல இருக்கிறார்.  தாதாவாக வரும் வினோத், ஜமீனாக வரும் அமர் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவுகிறார்கள்.

டான் கதையை ’பிளாக் காமெடி’யில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஜெய். குத்துப்பாட்டு, ரொமான்ஸ், ஆக்‌ஷன் போன்ற மசாலா அயிட்டங்கள் இருந்தாலும், இந்த ’ஆந்திரா மெஸ்’ கார சாரம் கொஞ்சம் கம்மியாகவே இருக்கிறது! பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும், முகேஷ்.ஜி-யின் ஒளிப்பதிவும் பரபரப்பைக் கூட்டுகிறது. நம்ம ரேட்டிங் 2/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.