மிஷன் இம்பாஸிபிள்: ஃபால் அவுட் - திரைவிமர்சனம்

  கனிமொழி   | Last Modified : 29 Jul, 2018 07:10 am
mission-impossible-fallout-movie-review

மிஷன் இம்பாஸிபிள் வரிசையில் வெளியாகும் ஆறாவது படம் இது. நாயகன் ஈதன் ஹன்ட்டாக அதே டாம் க்ரூஸ். மனிதருக்கு வயதே ஆகாது போலும். ஆக்‌ஷன், எமோஷனல் காட்சிகளில் எல்லாம் வழக்கம் போல கலக்குகிறார்.வில்லனாக ஹென்றி கெவில் நடித்துள்ளார். படம் தொடங்கி இறுதி வரை ஆடியன்ஸை ஒருவித பரபரப்புக்குள்ளாகவே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது திரைக்கதை.

கடந்த பாகத்தில் நாயகன் ஈதன் ஹன்ட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சாலமன் லேன் என்பவரின் ’சிண்டிகேட்’ என்னும் இயக்கம் இந்த பாகத்தில்‘அப்போச்தல்ஸ்’ என்ற பெயரில் தீவிரவாத இயக்கமாக மாறிச் செயல்பட்டு வருகிறது.லண்டனில் இருக்கும் ஈதன் ஹன்ட்டுக்கு ஒருநாள் ரகசிய தகவல் ஒன்று கிடைக்கிறது. அதில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 3 புளூட்டோனிய உலோகங்களைப் பற்றியும், அதை வாங்குபவர்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களின் படி தனது கூட்டாளிகள் பென்ஜி, லூதர் ஆகியோருடன் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு செல்லும் ஹன்ட், அங்கு நடக்கும் சண்டையில் புளூட்டோனியம் உலோகங்களை அபோச்தல்ஸ் தீவிரவாதிகளிடம் கோட்டை விட்டு விடுகிறார். தீவிரவாதிகளிடமிருந்து  3 புளூட்டோனிய உலோகங்களையும் வாங்கவிருக்கும் ஜான் லார்க் என்பவரைப் பிடிக்க ஈதன் ஹன்ட் குழு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகருக்கு கிளம்புகிறது. ஏற்கெனவே ஒரு முறை கோட்டை விட்டுவிட்டதால் அவர்களைக் கண்காணிக்க சிஐஏ ஏஜென்டான ஆகஸ்ட் வாக்கரும் அவர்களோடு செல்கிறார்.

பிறகு அங்கு அங்கு நடக்கும் சண்டையில் லார்க் கொல்லப்பட, ஆயுத வியாபாரிகளிடம் ஈதன் ஹன்ட் தன்னை லார்க் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். புளூட்டோனியத்தைக் கொடுக்க வேண்டுமானால் கடந்த பாகத்தில் கைது செய்யப்பட்ட சாலமன் லேனை போலீஸிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈதன் ஹன்ட்டுக்கு நிபந்தனை விடுக்கப்படுகிறது.

சாலமன் லேன் விடுவிக்கப்பட்டாரா? 3 புளூட்டோனியம் உலோகங்களும் ஈதன் ஹன்ட்டால் மீட்கப்பட்டதா? ஜான் லார்க் யார்? என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளோடு பதில் சொல்கிறது படம்.  மிஷன் இம்பாஸிபிள் வரிசையில் அதிக சேஸிங் காட்சிகளைக் கொண்ட படமும் இதுவே. ஒவ்வொரு சண்டை காட்சிகளும் சேசிங் காட்சிகளும் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரச்செய்யும். படத்தின் எல்லா காட்சிகளும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அமைத்திருக்கிறார் இயக்குநர்  கிறிஸ்டோபர் மேக்குறி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close