NewsTM திரைவிமர்சனம்: கஜினிகாந்த்

  shriram   | Last Modified : 03 Aug, 2018 06:04 pm

ghajinikanth-movie-review

ஆர்யா, சயீஷா, சம்பத், சதீஷ், கருணாகரன், லிங்கேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கஜினிகாந்த். 

ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான ஹீரோவின் அப்பா, தனது மகனுக்கு தலைவரின் பெயரை வைக்கிறார். ஆனால், சிறு வயது முதலே கடும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ள அவரை எல்லோரும் கஜினிகாந்த் என்றே அழைக்கின்றனர். இந்த மறதியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலிக்கிறார் நம்ம ஹீரோ. ஹீரோயினின் அப்பாவுக்கு ஹீரோவையும் அவரது மறதியையும் சுத்தமாக பிடிக்கவில்லை. அவரிடம் இருந்து எப்படி சம்மதம் வாங்கி ஹீரோயினை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. 

ஞாபக மறதி என்ற சின்ன வித்தியாசம் தான் படத்திற்கு. மற்றபடி, நூறு இருநூறு முறை பார்த்து சலித்து போன கதை தான். ஹீரோயினை பார்த்தவுடன் கையை, காலை விரித்துக் கொண்டு நடு ரோட்டில் நடக்கும் ஹீரோ, ஹீரோ என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் ஏமாளி ஹீரோயின், சீனுக்கு சம்பந்தமே இல்லாமல் டென்ஷனாகும் ஹீரோயினின் அப்பா, என படம் முழுவதும் நமக்கு நல்ல பரீட்சயமான கேரக்டர்கள் தான். ஒன்றுக்கு மூன்று காமெடியன்கள் இருந்தாலும், அவர்கள் தோன்றும் முக்கால்வாசி சீன்களில் சிரிப்பு வரவில்லை. ஒவ்வொரு காமெடி சீனிலும் 'டாம் அண்ட் ஜெர்ரி' போல பேக்ரவுண்டில் காமெடி சவுண்ட் எபெக்ட் வேற. 

முதல் பாதி ஆமை போல மெதுவாக நகர்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் வேகமாக சென்றாலும், கதை மேலும் மேலும் வலுவிழந்து கொண்டே போகிறது. க்ளைமேக்ஸ் பைட் சீனுக்காக ஒரு வில்லன் கேரக்டர். பெரிய இம்பாக்ட் இல்லை. அவர் சொல்வதற்கு முன் அவராது வசனங்களை நாமே சொல்லிவிடுவோம். எல்லாம் அவ்வளவு பழைய டயலாக். 

ஆர்யாவின் பெர்பார்மன்ஸ் டீசென்ட். க்ளைமேக்ஸ் காட்சியில் மெனெக்கெட்டு நடித்திருக்கிறார். அது ஓரளவு ஒர்கவுட்டும் ஆகியுள்ளது. சயீஷா, வழக்கமான லூசு பெண்ணே ஹீரோயின். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நடிப்பு இல்லை. ஆனால், டான்ஸில் பட்டையை கிளப்பியிருக்கிறார். சம்பத்தின் ஆக்டிங்  படத்தின் மிகப்பெரிய பலம். எப்போதும் வில்லன் ரோலில் பார்த்த அவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில், படம் ரொம்ப ஆவரேஜ். திரைக்கதை எத்தனை கிலோ என கேட்கும் அளவுக்கு வேலை செய்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார். நமக்கு அடல்ட் பிலிம் தான் வருதுன்னா, அதை மட்டும் பண்ண வேண்டியது தானே? ஏன் இப்படி, நானும் பேமிலி படம் எடுக்கிறேன்னு சொல்லி ஆர்யாவை பழி வாங்கிட்டீங்க ஜி... இதுல வேற இந்த படம் ஓடலைன்னா பழைய படியே படம் எடுப்பேன் என்று மிரட்டல் வேற... இருட்டு அறையில் படத்தில் காட்டிய ஈடுபாட்டில் 10% கூட இதில் காட்டாதது போல உள்ளது கஜினிகாந்த்.

நம்ம வெர்டிக்ட் 2/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.